திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் வி.கே.புரம் பகுதியில் , சாலையில் ஆதரவின்றி பிச்சை எடுத்து கொண்டிருந்த 6 சிறுவர்களை, குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளர் திருமதி.மீராள்பானு, மாவட்ட குழந்தைகள் நல அலுவலகர்கள், மற்றும் குழந்தைகள் குழு உறுப்பினர்கள் ஆகியோர் இணைந்து 6 சிறுவர்களை மீட்டு நெல்லை சந்திப்பில் உள்ள குழந்தைகள் நல குழுவிடம் ஒப்படைத்துள்ளனர்.
மேலும் 05.02.2022 இன்று களக்காடு பகுதியில் உள்ள கடைகளில் நடத்திய தீடீர் சோதனையில் கடையில் வேலை பார்த்த 15 வயதை சேர்ந்த 2 சிறுவர்கள் மீட்டுகப்பட்டு அவர்கள் குழந்தைகள் நல குழுவிடம் ஒப்படைத்தனர்.