திண்டுக்கல் : தமிழகத்தில் முக்கிய நகரங்கள் பேருந்து நிலையங்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்கள் போன்ற இடங்களில் பிச்சை எடுத்து வாழ்ந்து வரும் நபர்களை மீட்டு அவர்களுக்கு உரிய உதவிகள் செய்து அரசு மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற காப்பகங்களில் தங்க வைக்க வேண்டும் என்று தமிழ்நாடு காவல்துறை இயக்குனர் அவர்களின் அறிவுறுத்தலின்படி திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.பாஸ்கரன் அவர்களின் உத்தரவின், படி (03.12.2022) திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் ஆதரவின்றி அனாதையாக சுற்றி பிச்சை எடுக்கும் நபர்களை அடையாளம் கண்டு அவர்களை மீட்டு முடி திருத்தம், முக சவரம் செய்து புதிய ஆடைகள் அணிவித்தும் அரசு காப்பகங்கள் மற்றும் அரசு அனுமதி பெற்ற தனியார் காப்பகங்களில் ஒப்படைக்குமாறு கூறிய உத்தரவின்படி திண்டுக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து காவல்துறையினர் சமூக ஆர்வலர்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் சேர்ந்து பிச்சை எடுத்த 65 நபர்களை அடையாளம் கண்டறிந்து மீட்டு அவர்களுக்கு தேவையான அடிப்படைகள் வசதிகள் செய்து கொடுத்து அரசு மற்றும் தனியார் காப்பகத்தில் உரிய பாதுகாப்பு அடிப்படையில் ஒப்படைக்கப்பட்டனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.