திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், கங்கைகொண்டான் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட திருநெல்வேலியில் இருந்து மதுரை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் கங்கைகொண்டான் அருகில், கடந்த 12.11.2021 அன்று அடையாளம் தெரியாத நபர் வாகனத்தில் அடிப்பட்டு இறந்த நிலையில் கிடந்தார்.
இறந்த நபரை ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பின் முகவரி தெரியாத இறந்த ஆண் பிரேதத்தை கங்கைகொண்டான் காவல் ஆய்வாளர் திரு. பெருமாள் அவர்கள் உத்தரவின் பேரில், பத்திரிகைகளில் விளம்பரம் மூலம் தெரிவித்தும் யாரும் இதுவரை உரிமை கோரப்படாத நிலையில், முதல் நிலை காவலர் திரு. அருண் தியாகு, இரண்டாம் நிலை காவலர் திரு. ராஜசேகரன் ஆகியோர் தாமாக முன்வந்து 21.11.2021 இன்று சட்ட விதிகளுக்கு உட்பட்டு பிரேத பரிசோதனை செய்த இறந்த நபரை ஆலடிப்பட்டி பகுதியில் நல்லடக்கம் செய்தனர்.