திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியை அடுத்த கல்லு கடைமேடு சுடுகாடு பின்புறமாக ஆரணி ஆற்றில் (35). வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் அழுகிய நிலையில் கிடப்பதாக அப்பகுதி மக்கள் பொன்னேரி காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதன் அடிப்படையில் பொன்னேரி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து தண்ணீரில் மிதந்து கொண்டிருந்த சடலத்தை கைப்பற்றி பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அதன் பின்னர் வழக்கு பதிவு செய்து இறந்தவர் யார்?எந்த பகுதியை சேர்ந்தவர்? என விசாரணை செய்து வருவதுடன் அவராக தண்ணீரில் விழுந்தாரா? வேறு யாரேனும் அடித்து தண்ணீரில் வீசினரா என்ற கோணத்தில் பொன்னேரி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்
திரு. பாபு