அரியலூர்: அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. விஷ்வேஷ் பா.சாஸ்திரி, இ.கா.ப., அவர்களின் உத்தரவின்படி, ஜெயங்கொண்டம் நகர போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு. மதிவாணன் தலைமையில் இன்று (06.01.2026) ஜெயங்கொண்டம் நகரில் உள்ள அனைத்து ஆட்டோ ஓட்டுனர் சங்க ஆட்டோ ஓட்டுனர்களை ஒருங்கிணைத்து “சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி” நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், வேகமாக வாகனம் ஓட்டக்கூடாது, மதுவிலக்கு விதிகளை கடைப்பிடிக்க வேண்டும், சாலை விதிகளை கடைப்பிடிப்பது அவசியம் ஆகிய முக்கிய அம்சங்கள் விரிவாக விளக்கப்பட்டன.
நிகழ்ச்சியில் போக்குவரத்து உதவி காவல் ஆய்வாளர் திரு. சங்கர் மற்றும் மற்ற போக்குவரத்து காவலர்கள் உடனிருந்தனர். இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி மூலம் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு பாதுகாப்பான ஓட்டுனர் பழக்கவழக்கங்களை மேம்படுத்த ஊக்கமளிக்கப்பட்டது.















