திண்டுக்கல்: திண்டுக்கல் நகர் பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக நகர் DSP. கோகுலகிருஷ்ணனுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் நகரத்திற்கு காவல் நிலைய ஆய்வாளர் இளஞ்செழியன் சார்பு ஆய்வாளர் ரவிசங்கர் மற்றும் காவலர்கள் திண்டுக்கல் நகர் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது ஒத்தக்கன்பாலம் பகுதியில் ஆட்டோவில் வைத்து கஞ்சா விற்பனை செய்த அஜித்குமார்(22), மதன்குமார்(32), நாகராஜ்(24) ஆகிய 3 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து 1 கிலோ 100 கிராம் கஞ்சா மற்றும் ஆட்டோவை பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா