தென்காசி : தென்காசி மாவட்டம் ஆலங்குளம் புதுப்பட்டி அருகே காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே வந்த பயணிகள் ஆட்டோவை சோதனையிட்ட போது அதில் சட்ட விரோதமாக விற்பனை செய்வதற்கு 300 மதுபாட்டில்கள் கொண்டு செல்லப்பட்டது தெரிய வந்தது. இது குறித்து விசாரணை செய்து ஆட்டோ ஓட்டுநர் அம்பாசமுத்திரம் அருகே பொட்டல் காமராஜர்புரம் பகுதியைச் சேர்ந்த கருப்பசாமி மகன் முருகன் (44). என்பவரை கைது செய்து ஆட்டோ, மற்றும் மதுபாட்டில்களை பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்















