தேனி: தேவதானப்பட்டி அருகே கோட்டார்பட்டியைசேர்ந்தவர் ராமநாதன் (42), இவர் இதே ஊரில் ஆட்டுக்குட்டியை வளர்த்து வருகிறார். இந்த ஊரில் அடிக்கடி ஆடுகள் திருடு போனது. இதனை அடுத்து மிகவும் உஷாராக இருந்த ராமநாதன் சம்பவ நாளன்று இரவில் ஆடுகள் சப்தம் கேட்டது.
உடனே விழித்துப் பார்த்தபோது இவரது ஆட்டுகொட்டகையில, தேவதானப்பட்டியை சேர்ந்த பாண்டீஸ்வரன்(28), என்பவர் ஆட்டுகுட்டியை திருடி கொண்டு இருந்தார். இவரை பிடித்த, ராமநாதன் மற்றும் குடும்பத்தினர், தேவதானப்பட்டி காவல நிலையத்தில் ஒப்படைத்தனர்.
வழக்குப்பதிவு செய்து ஆட்டுக்குட்டியை திருடிய பாண்டீஸ்வரனை தேவதானப்பட்டி போலீஸார் வழக்குபதிவு செய்து கைது செய்தனர்.













