செங்கல்பட்டு: செங்கல்பட்டு நகராட்சிக்கு உட்பட்ட 11வது வார்டு13வது வார்டு மற்றும் 19வார்டு பகுதி மக்களுக்கு பட்டா ரெடியாக இருப்பதாகவும், நாளையதினம் தாம்பரத்தில் நடைபெற உள்ள நலத்திட்டங்கள் வழங்கும் அரசு நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று அனைவருக்கும் வீட்டுமனை பட்டா வழங்க இருப்பதாக காத்திருந்ததாகவும் தற்போது இந்த மூன்று வார்டு மக்களுக்கும் பட்டா வழங்காமல் ஒத்தி
வைத்துள்ளதாகவும் தகவல் அறிந்து கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் செங்கல்பட்டு நகராட்சிக்கு உட்பட்ட 11வது13 வது வார்டு மற்றும் பகுதி மக்கள் ஆண்கள் பெண்கள் என 300க்கும் மேற்ப்பட்டோர் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்க வந்தவர்களை நுழைவாயில் கேட்டிலேயே மடக்கி நிறுத்தியதால் பரபரப்பு நிலவியது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த செங்கல்பட்டு வட்டாட்சியர் ஆறுமுகம் போராட்டக் காரர்களிடம் சமரசம் பேசினார். பேச்சுவார்த்தைக்கு ஒத்துவராத மக்கள் வட்டாட்சியரிடம் எங்களுக்கென்று தயார் செய்யப்பட்ட பட்டாக்களை நாளைக்கே முதல்வர் கையினால் வழங்க வேண்டும். என வட்டாட்சியரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு கலெக்டர் அலுவலகம் முன்பு அமர்ந்து வேண்டும் பட்டா வேண்டும். அதுவும் உடனே வேண்டும் என்று கோஷமிட்டபடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
செங்கல்பட்டில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அன்பழகன்