மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தில் மார்ச் 8-ம் தேதி உலக மகளிர் தினத்தை முன்னிட்டு காவல்துறையில் பணிபுரியும் அனைத்து பெண் காவல் ஆளிநர்கள் மற்றும் மாவட்ட காவல் அலுவலக பெண் அலுவலர்களுடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் கலந்துக்கொண்டு உரையாற்றிய போது காவல்துறையினர் தம் பணியில் மன அழுத்தமில்லாமல் மகிழ்ச்சியாக பொதுமக்களை கையாள்வதற்குரிய வழிமுறைகளை பகிர்ந்தார். மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்த மகளிர் தின நிகழ்ச்சி புதிதாக அமைந்துள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர், கூடுதல் மாவட்ட ஆட்சியர், மாவட்ட வருவாய் அலுவலர், மயிலாடுதுறை கோட்டாச்சியர் மற்றும் மாவட்ட சமுக நலத்துறை அலுவலர் மற்றும் பிற துறைகளை சேர்ந்த அலுவலர்கள் கலந்துக்கொண்டனர்.
மாவட்ட காவல்துறை மற்றும் மாவட்ட சமூக நலத்துறை இணைந்து பெண்கள் விழிப்புணர்வு தொடர்பான 11 தலைப்புகளில் (1. உருவ கேலி, 2. எதிர் பாலினத்தை கையாளுதல், 3. பெண்ணை படம் எடுத்து மிரட்டுவதை துணிவுடன் எதிர்கொள்ளல், 4. ஆபாச படம் – குற்றவாளியை குடும்பத்தினரின் ஆதரவுடன் எதிர்கொள்ளல், 5. பெண் குழந்தைகளுக்கு உணவு பாகுபாடு, 6. குழந்தை திருமணத்தை தடுத்தல், 7. பெண்ணின் விருப்பமின்றி அவளை பின்தொடர்தல், 8. பாலியல் சீண்டல், 9. சமுக ஊடக அறிமுகத்தை நம்பி மோசடி பேர்வழிகளின் வலையில் விழுதல், 10. சமூக ஊடகங்களுக்கு அடிமையாதல், 11. பெண்ணை பயமுறுத்துதல்) குறும்படங்கள் தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டது. அதுமட்டுமின்றி பள்ளி குழந்தைகளுக்கான தற்காப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.