திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் கௌதமபுரி, தெற்கு தெருவை சேர்ந்த சுப்பையா(52). என்பவர் ஆடுகள் வளர்த்து வருகிறார். (14.11.2024) அன்று சுப்பையா வீட்டிற்கு முன்பு உள்ள ஆடுகளில் ஒரு ஆட்டை மட்டும் காணவில்லை. இதுகுறித்து அம்பாசமுத்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், ஆடு திருட்டில் ஈடுபட்டது அதே தெருவை சேர்ந்த ஆறுமுகத்துரை(23). என்பது தெரிய வந்ததையடுத்து காவல் உதவி ஆய்வாளர், ஆனந்த பாலசுப்ரமணியம் ஆறுமுகத்துரையை (30.11.2024) அன்று கைது செய்து அவரிடமிருந்து 1 ஆட்டை பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
சண்முகநாதன்