செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் தமிழக அரசு தேர்தல் வாக்குறுதிகளை அமல்படுத்த வேண்டும் என்று செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அனைத்து அரசு அலுவலர்கள் ஆசிரியர்கள் அனைத்து உள்ளாட்சி (போட்டா .ஜியோ )பணியாளர்கள் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது . இந்த ஆர்ப்பாட்டத்தில் J.மோகனரங்கன் முதன்மை ஒருங்கிணைப்பாளர் மாவட்ட தலைவர் TNGOU தலைமையிலும், திரு M.ரமேஷ், மாவட்ட செயலாளர், TNGOU திரு ஜோசப் மாவட்ட செயலாளர், தமிழ்நாடு தொடக்க பள்ளி ஆசிரியர் சங்கம், திரு நாராயணன் மாவட்ட தலைவர், தேசிய ஆசிரியர் சங்கம் திரு இரா அரிகிருஷ்ணன் மாநில தலைமை இடத்துச் செயலாளர்,TNHSPGTA திரூ தில்லை கோவிந்தன், மாநில செயலாளர், தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் திரு ராஜேந்திரன் மாவட்ட தலைவர் தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் மற்றும் அடிப்படை பணியாளர் சங்கம் முன்னிலையிலும் நடைபெற்றது.
மேலும் போராட்டத்தில் திருமதி ம.மணிமேகலை மாநில மகளிர் அணி செயலாளர் TNGOU சிறப்புரை மற்றும் குபேந்திரன் மாவட்ட செயலாளர் , தமிழ்நாடு அரசு துறை உர்தி ஓட்டுநர்கள் சங்கம் திரு திருஞான செல்வன் மாநில தலைவர் தமிழ்நாடு கொசு ஒழிப்பு பணியாளர்கள் சங்கம், திரு அ.தனுஷ் மாவட்ட தலைவர் OHT ஆப்ரேட்டர் சங்கம் திருமதி ராதிகா மாநில தலைவர் ஆஷா பணியாளர்கள் சங்கம் மற்றும் மணிமொழி செல்வன் மாநில பொது செயலாளர் தமிழ்நாடு அரசு பொது நூலக துறை ஒன்றியம் வாழ்த்துரையும் , இதனைத் தொடர்ந்து தலைமைச் செயலகம் முதல் அனைத்து துறைகளிலும் உள்ள அனைத்து பிரிவு காலி பணியிடங்களையும் நிரப்பி பதவி உயர்வினையும் வழங்க வேண்டும்.
மாநகராட்சி நகராட்சி பேரூராட்சி மற்றும் கிராம ஊராட்சிகளில் பணிபுரியும் மேல்நிலை நீர் தேக்க தொட்டி இயக்குபவர்கள் கொசு ஒழிப்பு பணியாளர்கள், ஆஷா பணியாளர், தூய்மை பணியாளர்கள் மற்றும் தூய்மை காவலர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டும் போன்ற 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வென்றெடுக்க அரசு அலுவலர்களே ஆசிரியர்களே அனைத்து உள்ளாட்சி பணியாளர்களே பங்கேற்போம், ஆர்ப்பரிப்போம் என்ற கோஷங்களை எழுப்பி போராட்டத்தை நடத்தினர். மற்றும் நன்றி உரை மோகன் மாவட்டத் தலைவர் கிராம உதவியாளர் சங்கம் இதில் மற்றும் 300க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் உள்ளாட்சி பணியாளர்கள் கிராம நிர்வாக உதவியாளர்கள் அடிப்படை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
செங்கல்பட்டில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அன்பழகன்
















