இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்ட அரசு சட்டக் கல்லூரியில் நடைபெற்ற State Level English Moot Court Competition-2026 நிகழ்ச்சியில் இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. G. சந்தீஷ், IPS., சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இந்த விழாவில், போட்டியில் பங்குபெற்ற மாணவர்களைத் திறமையாக பார்வையிட்டு, சட்ட அறிவு, வாதத் திறன் மற்றும் சமூக பொறுப்பு ஆகியவை எதிர்காலத்தில் சிறந்த சட்ட வல்லுநர்களாக உருவாக மிகவும் அவசியமான பண்புகள் என அவர் அறிவுரை வழங்கினார். மேலும், மாணவர்கள் தங்கள் கல்வி மற்றும் பணிகளில் தொடர்ந்து முயற்சி செய்து, சட்டத்துறையில் சிறந்த பங்களிப்பாளர்களாக வெளிப்பட வேண்டும் என்று ஊக்குவித்தார். இந்த போட்டி மாணவர்களின் சட்ட வாதக் திறனை மேம்படுத்தும் முக்கிய நிகழ்வாக அமைந்தது.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு. அக்பர் அலி
















