சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே பிள்ளையார்பட்டியில் உலக பிரசித்தி பெற்ற கற்பக விநாயகர் கோவிலில் இன்று ஆங்கில புத்தாண்டு தினத்தை முன்னிட்டு அதிகாலை 4.15 மணி அளவில் நடை திறக்கப்பட்டது. மூலவர் கற்பக விநாயகர் தங்க கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி தரும் நிலையில் தமிழர்களின் முதல் கடவுளாக போற்றப்படுகின்ற விநாயகப் பெருமானை தரிசிக்க தமிழக முழுவதும் மட்டுமன்றி வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து நீண்ட வரிசையில் தங்க கவச அலங்காரத்தில் காட்சி தரும் கற்பக விநாயகரை தரிசித்து வருகின்றன. இதே போல தற்போது கேரள மாநிலம் ஐயப்பன் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் விரதம் இருந்து சென்று வரும் பக்தர்கள் அவர்கள் செல்லும் வழியில் பிள்ளையார்பட்டி கற்பக விநாயகரையும் தரிசிக்க கோயில் வளாகத்தில் குவிந்து கற்பக விநாயகரை தரிசித்து வருகின்றனர்.
பக்தர்களின் வசதிக்காக கோயில் நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு பக்தர்களின் அடிப்படை வசதிகள் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. காவல்துறை சார்பில் 30க்கும் மேற்பட்ட முக்கிய இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணித்து வருகின்றனர் . ஆங்கில புத்தாண்டு தினத்தை முன்னிட்டு பிள்ளையார்பட்டியில் 750 க்கு மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அரசு போக்குவரத்து கழகம் சார்பில் பிள்ளையார்பட்டிக்கு சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகிறது.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
A. ராபர்ட் கென்னடி