சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் சாலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என வியாபாரிகளுக்கு டிஎஸ்பி எச்சரிக்கை விடுத்துள்ளார். தேவகோட்டை நகராட்சி ஆனது வளர்ந்து வரும் நகராட்சிகளில் ஒன்றாகும் தேவகோட்டை ராம் நகரில் இருந்து ஆற்றுப்பாலம் ஒத்தக்கடை வரை திருச்சி ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் இருபுறமும் ஆக்கிரமிப்புகள் உள்ளன. இது தவிர தியாகிகள் சாலை. வாடியார் வீதி உள்ளிட்ட முக்கிய இடங்களிலும் ஆக்கிரமித்து கடைகள் உள்ளன. இதனால் போக்குவரத்துக்கு ஏராளமான இடையூறுகளால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக பஸ் நிலையம் பகுதியில் மக்கள் நிற்பது கூறிய இடங்களை ஆக்கிரமித்து கடைகளை தாங்களாவே பெரிதுபடுத்தி இருக்கின்றனர். இதனால் பொதுமக்கள் நகரில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவலியுறுத்தி வருகின்றனர்.
மக்களின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் 17ஆம் தேதி நேற்று மாலையில் டிஎஸ்பி கௌதம் அவர்கள் தலைமையில் தேவகோட்டை நகர் காவல் நிலைய போலீசார் டிராபிக் போலீசார். என காவல்துறையினர் ஆக்கிரமிப்பு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்விற்குப் பின்னர் டிஎஸ்பி கௌவுதம் தெரிவிக்கையில் ஆக்கிரமிப்பாளர்கள் அனைவரும் தாமாகவே முன்வந்து தங்களது ஆக்கிரமிப்புகளை அகற்றிக் கொள்ள வேண்டும். வருகின்ற 20ம் தேதிக்குள் ஆக்கிரமிப்புகளை அகற்றிட வேண்டும். தவறும் பட்சத்தில் 21ம் தேதி நகரில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதோடு சட்டப்பூர்வ நடவடிக்கையும் எடுக்கப்படும் என தெரிவித்தார்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு. விவேக்