திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம், வடக்கு வள்ளியூர், நடுத்தெருவை சேர்ந்த சுவாமிநாதன் என்பவரின் மகன் ஹரிஹர சுப்பிரமணியன் (58). என்பவருக்கு நாங்குநேரி தாலுகா, ராஜாக்கல்மங்கலம் பகுதியில் 1 ஏக்கர் 45 சென்ட் நிலம் உள்ளது. அதில் ரூபாய் 20 லட்சம் மதிப்புள்ள 1 ஏக்கர் 20 சென்ட் நிலம் போலி ஆவணம் மூலம் வேறோருவர் பெயரில் இருப்பது தெரியவந்து, மேற்படி நிலத்தினை மீட்டுத்தருமாறு ஹரிஹர சுப்பிரமணியன் திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N.சிலம்பரசன்.இ.கா.ப., அவர்களிடம் மனு அளித்தார்.
அதன்படி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மனு மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி, திருநெல்வேலி மாவட்ட குற்றப்பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் பொன். ரகு (பொறுப்பு) அவர்களுக்கு உத்தரவிட்டதன் பேரில், மாவட்ட குற்றப்பிரிவு உதவி ஆய்வாளர் சாந்தி தலைமையிலான குற்றப்பிரிவு காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு ஒரு மாத காலத்திற்குள் நிலத்தை மீட்டு, அதற்கான ஆவணத்தை திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N.சிலம்பரசன்.இ.க.ப., அவர்கள் நில உரிமையாளர் ஹரிஹர சுப்பிரமணியனிடம் (28.08.2024) இன்று மாவட்ட காவல் அலுவலகத்தில் வைத்து வழங்கினார். இவ்வழக்கில் திறம்பட விசாரணை மேற்கொண்டு , மனு அளித்து ஒரு மாதத்திற்குள் மீட்டு உரிமையாளரிடம் ஒப்படைக்க காரணமாக இருந்த திருநெல்வேலி மாவட்ட குற்றப்பிரிவு காவல் துறையினரை திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வெகுவாக பாராட்டினார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு. சண்முகநாதன்