விருதுநகர் : விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே தெற் காற்றில் தடுப்பணை கட்ட தேர்வு செய்யப்பட்ட இடத்தை மாற்றி அமைத்து விவசாயிகளுக்கு பயன்படும் வகையில் இடம் தேர்வு செய்ய வேண்டும் என அ.தி. மு.க. சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காரியாபட்டி அ.தி.மு.க. மேற்கு ஒன்றிய செயலாளர் தோப்பூர் முருகன் தலைமையில் கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில், தெற்காற்றில் சுமார் ரூ.11.28 கோடி மதிப்பீட்டில் புதிதாக தடுப் பணை கட்ட தேர்வு செய்யப் பட்ட இடம் விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் பயன்தரக் கூடிய இடமாக தேர்வு செய்யப்படவில்லை. தோப்பூர் கிராம பொதுமக்க ளும் புதுப்பட்டி, சித்து மூன்றடைப்பு, அல்லிக்குளம், ஆத்திகுளம் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட கிராம பொதுமக்கள்விவசாயத் றும் உபரி நீர் சித்து மூன்ற திற்கு பயன் தரக்கூடிய இடமாக மந்திரி ஓடை கிராமத்தின் தெற்கு ஆற்றில் இருந்து தோப்பூர் கண் மாய்க்கு பிரிந்து செல்லும் இடத்தின் அருகே புதிய தடுப்பணை கட்டினால் பொதுமக்களுக்கும், விவசா யிகளுக்கும் முழுமையாக பயன்தரக்கூடிய இடமாக இருக்கும்.
மழைக் காலங்களிலும் வைகை ஆற்றில் வெள்ளம் ஏற்படும் போது மதுரை மாவட்டத்தில் உள்ள கல்லணை, உலகாணி கண்மாய் களில் இருந்து வெளியேறும் தண்ணீர் தெற்கு ஆற்றில் கலந்து வரும் தண்ணீர் வீணாக புதுப்பட்டி குண்டாறு வழியாக ஆற்றிலேயே செல்கிறது.மந்திரி ஓடை அருகே புதிய தடுப்பணை கட்ட தேர்வு செய்யப்பட்டு இருந்தால் தெற்கு ஆற்றில் வரும் தண்ணீரால் தோப்பூர் கண்மாய் பெருகி வெளியேடைப்பு, அல்லிக்குளம், ஆத்திகுளம், புதுப்பட்டிஉட்பட்டபல கிராமங்களுக்கு கொண்டு செல்ல முடியும். கடந்த அ.தி.மு.க. ஆட்சியில்
கல்குறிச்சி கரியனேந்தல் அருகே குண்டாற்றில் கட்டப் பட்ட ரூ.11.50 கோடி மதிப் பீட்டிலான புதிய தடுப்பணை மூலம் சுமார் 50-க்கும் மேற்பட்ட கிராம விவசாயிகள் மற்றும் பொது மக்களுக்கு பயன் தரக்கூடி யதாக இன்றும் உள்ளது. எனவே, இது போல விவசாயிகளுக்கு அதிகமாக பயன்படும் இடத்தை மாற்றி தேர்வு செய்து தடுப்பணை கட்ட வேண்டும் என, காரியாபட்டி மேற்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் கோரிக்கை விடுத்து வகையில் அந்த மனுவில் தெரிவிக்கப் பட்டுள்ளது. இதில், ஒன்றிய நிர்வாகிகள் மாவட்ட நிர்வா கிகள் உட்பட பலர்
கலந்து கொண்டனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி