கோவை : திருப்பூர் மாவட்டம், திருமுருகன்பூண்டி தேவராயன் பாளையத்தை, சேர்ந்தவர் சண்முகம்; இவரது மகன் சரவணன், (28), கோவை மென்பொருள் நிறுவனத்தில், பொறியாளராக பணியாற்றி வருகிறார். நேற்று இவரது பிறந்தநாள். அவிநாசி வஞ்சிபாளையத்தில், நண்பர் வீட்டுக்கு சென்று, கேக் வெட்டி பிறந்த நாள், கொண்டாடி விட்டு, பைக்கில் இரவு சரவணன், தனது வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தார். அவிநாசி கருணைபாளையம், பிரிவில், எதிரே வந்த வேன் மோதியதில், பைக்குடன் துாக்கி வீசப்பட்டதில், சரவணன் பலியானார் .விபத்து ஏற்படுத்திய வேன் டிரைவர், கருவம்பாளையத்தை சேர்ந்த பாலசுப்ரமணியம், (50), என்பவரை அவிநாசி காவல் துறையினர், கைது செய்தனர்.