திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம், கூடங்குளம் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட வைராவிகிணறு, பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த ராஜதுரை (65). என்பவரின் தம்பி மகனான சாமிநாதன் என்பவரிடம் சில மாதங்களுக்கு முன்பு வைராவிகிணறு, நடுத் தெருவை சேர்ந்த அஜித்குமார் (26). என்பவர் பிரச்சனை செய்து தகராறில் ஈடுபட்டு கொண்டு இருந்ததை பார்த்த ராஜதுரை தட்டி கேட்டுள்ளார். இதனை மனதில் வைத்துக் கொண்டு (15.09.2024) ராஜதுரை வீட்டின் அருகே தனது சைக்கிளில் வந்து கொண்டிருந்த போது அங்கு வந்த அஜித்குமார் அவரை வழிமறித்து அவதூறாக பேசி மிரட்டல் விடுத்து சென்றுள்ளார். இ துகுறித்து ராஜதுரை கூடங்குளம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் அடிப்படையில் கூடங்குளம் காவல் ஆய்வாளர், ஷியாம் சுந்தர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு அஜித்குமாரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
சண்முகநாதன்