திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம், பழவூர் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட சிதம்பராபுரம், அம்மன் கோவில் தெருவை சேர்ந்த முருகேசன் (45). என்பவர், அதே ஊரைச் சேர்ந்த திவாகரன் (28). தென்காசி மாவட்டம், வி.கே.புதூர், வடக்கு தெருவை சேர்ந்த சங்கர் ஆனந்த் (31). ஆகிய இருவரும் சேர்ந்து சிதம்பராபுரம் ஊரில் விநாயகர் கோவில் திருவிழாவிற்கு போடப்பட்டு இருந்த கச்சேரி மேடையை தீயிட்டதை பார்த்து தடுக்க முயன்ற பொழுது அவரை அவதூறாக பேசி மிரட்டல் விடுத்து சென்றுள்ளனர். இது குறித்து முருகேசன் பழவூர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் அடிப்படையில் பணகுடி வட்ட காவல் ஆய்வாளர், அஜிகுமார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு திவாகரன், சங்கர் ஆனந்த் ஆகிய இருவரையும் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
சண்முகநாதன்