திருநெல்வேலி : புளியங்குடியை சேர்ந்த சக்திஅனுபமா என்பவர் வாசுதேவநல்லூரில் வட்டார வளர்ச்சி அலுலராக பணியாற்றி வந்தார். (12.11.2017) அன்று வட்டார வளர்ச்சி அலுவலர் பணிநிமித்தமாக திருநெல்வேலி வந்து பணிபுரிந்து வாசுதேவநல்லூருக்கு சென்று கொண்டிருந்த போது வெங்கலபொட்டல் அருகே வட்டார வளர்ச்சி அலுவலர் சென்ற வாகனத்தை கக்கன்நகரை சேர்ந்த செந்தில்குமார் (38), என்பவர் ஒட்டி வந்த வாகனம் மோதி உள்ளது. அதனால் வட்டார வளர்ச்சி அலுவலர் வாகனத்தை ஓட்டி வந்த ஓட்டுநர் பார்த்து வர கூடாதா என்று கேட்டதற்கு செந்தில்குமார் மற்றும் அவரது தரப்பினர்கள் சேர்ந்து வாகனத்தை சேதப்படுத்தி வட்டார வளர்ச்சி அலுவலருக்கு மிரட்டல் விடுத்தள்ளனர். மேற்படி சம்பவம் குறித்து மானூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு குற்றவாளிகளை கைது செய்தனர்.
இவ்வழக்கு விசாரணை திருநெல்வேலி மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், (08.11.2022), வழக்கை விசாரித்த நீதிபதி திரு.விஜயகுமார் அவர்கள் குற்றவாளி செந்தில்குமாருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 32 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். இவ்வழக்கில் திறம்பட புலன் விசாரணை செய்து சாட்சிகளை விரைவாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி குற்றவாளிக்கு தண்டனை பெற்று கொடுத்த மானூர் காவல் துறையினரை திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ப.சரவணன், இ.கா.ப அவர்கள் வெகுவாக பாராட்டினார்.