தேனி: தேனி அருகே உள்ள வாளையப்பட்டியை சேர்ந்தவர் மதன்குமார், இவர் நாம் தமிழர் கட்சியின் தேனி ஒன்றிய பொறுப்பாளர் உள்ளார். இவர் மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் குறித்து அவதூறான கருத்தை சமூக வலைதளங்களில் பரப்பி உள்ளார்.
இதுகுறித்து பூதிப்புரம் திமுகசெயலாளர் பால்பாண்டி அளித்த புகாரின் அடிப்படையில் பழனிசெட்டிபட்டி போலீசார், மதன்குமார் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.