திண்டுக்கல் : திண்டுக்கல் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரமோகன் மற்றும் காவல் கண்காணிப்பாளரின் தனிப்படை போலீசார் செட்டிநாயக்கன்பட்டி பொன்னி நகர் பகுதிக்கு ரோந்து சென்றனர். அப்போது அங்கு ஆண்களை விபசாரத்துக்கு அழைத்து கொண்டிருந்த 3 பெண்கள் மற்றும் புரோக்கர்களை போலீசார் சுற்றி வளைத்து பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் ராமநாதபுரம் மாவட்டம், வண்டல் பகுதியை சேர்ந்த ராதாகிருஷ்ணன், திண்டுக்கல் ராஜக்காபட்டியை சேர்ந்த சண்முகம், சாணார்பட்டியை சேர்ந்த சுரேஷ், திண்டுக்கல் மேட்டுப்பட்டியை சேர்ந்த மரிய ஸ்டாலின் பாண்டி என்று தெரியவந்தது. வாடகைக்கு வீடுகளை எடுத்து பெண்களை வைத்து விபசாரம் செய்யும் புரோக்கர்களாக செயல்பட்டுள்ளனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து 4 பேரை கைது செய்தனர். இதேபோல் பிடிபட்ட 3 பெண்கள் தாடிக்கொம்பு, மானாமதுரை, கோவை சோமனூர் பகுதிகளை சேர்ந்தவர்கள் ஆவர். இவர்களுக்கு போலீசார் அறிவுரை கூறி, திண்டுக்கல் பாரதிபுரத்தில் உள்ள பெண்கள் காப்பகத்தில் சேர்த்தனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா