கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம்இராயக்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட திம்ஜேப்பள்ளி கிராமத்தில் உள்ள கம்பெனியில் அரவிந்த் என்பவர் செக்யூரிட்டி சூப்பர்வைசராக பணிபுரிந்து வருவதாகவும் (05.05.2025) ஆம் தேதி காலை சுமார் 06.20 மணியளவில் அரவிந்த் உடன் பணிபுரியும் செக்யூரிட்டி பிரிவை சேர்த்த இரண்டு நபர்கள் பணியில் இருந்த போது ஜென்றல் கிச்சன் பின்புறம் இரண்டு நபர்கள் அலுமினியம் பொருட்களை சுமார் 20 கிலோ அளவில் திருடி எடுத்துக்கொண்டு சென்று கொண்டுயிருந்தவர்கள் செக்யூரிட்டியை பார்த்து ஓட முயற்சி செய்தவர்களை பிடித்து வைத்து இராயக்கோட்டை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்க போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அலுமினிய பொருட்களை திருடிய இரண்டு நபர்களை கைது செய்து காவல் நிலையம் அழைத்துச் சென்றனர், அரவிந்த் காவல் நிலையத்தில் ஆஜராகி கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிந்து போலீசார் அலுமினிய பொருட்களை திருடிய இரண்டு நபர்களை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்து சிறையில் அடைத்தனர்.