இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் வட்டம் ஆர்.எஸ்.மங்கலம் பேரூராட்சிக்கு உட்பட்ட நீர்ப்பாசன வாய்க்கால்கள் முறையாக தூர்வாரப்படாமல் தூர்ந்து போய் உள்ளன. தற்பொழுது மழைக் காலமாக இருப்பதால் பாசன வாய்க்கால்கள் தூர்வாரப்பட்டிருந்தால் கண்மாயிலிருந்து திறந்துவிடப்படக் கூடிய தண்ணீர் முறையாக பாசன வாய்க்காலை கடந்து சுற்றியுள்ள கிராமங்களுக்கு சென்றடையும். ஆனால் ஆர்.எஸ்.மங்கலத்தை சுற்றி இருக்கும் பல வாய்க்கால்கள் தூர்வாரப்படாமல் உள்ளது. இதனை பேரூராட்சி நிர்வாகம் அலட்சியமாக செயல்படுகிறது. மேலும் ஆர்.எஸ்.மங்கலத்தை சுற்றியுள்ள பல கிராமங்கள் இவ்வாய்க்கால்கள் மூலமாகவே விவசாயத்திற்கு தேவையான நீரை பெற்று வருகின்றனர். எனவே ஆர்.எஸ்.மங்கலத்திற்கு உட்பட்ட நீர் பாசன வாய்க்கால்களை உடனடியாக தூர்வார நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு. அக்பர் அலி