மதுரை : மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே தனிச்சியம் கிராமத்தில் அமைந்துள்ள ஶ்ரீ சீலைக்காரி அம்மன் திருக்கோவில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. நான்கு நாட்கள் நடந்த இந்த யாகசாலை பூஜையில் நான்கு கால சிறப்பு ஹோமங்கள் நடைபெற்றது. மூலமந்திர ஹோமம், கோ பூஜை, மகா கணபதி ஹோமம், பூர்ணாகுதி, தீபாராதனை நடைபெற்றது. பட்டாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க, வானத்தில் கருடன் வட்டமிட, யாகசாலையில் இருந்து கடம் புறப்பாடாகி புனித நீர் கோவிலை சுற்றி வளம் வந்து பின் கோபுர உச்சிக்கு கொண்டு செல்லப்பட்டு கலசங்களில் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து திருக்கோவில் வருகை தந்த பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை பூசாரி ஜெயசீலன் மற்றும் கோவில் பங்காளிகள் கிராம மக்கள் செய்தனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி