தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் முழு ஊரடங்கினை மீறி முககவசம் அணியமால், தனிமனித இடைவெளி இல்லமால் சிலர் நடைபயிற்சி மற்றும் விளையாட்டு பயிற்சி மேற்கொண்டனர். இருசக்கர வாகனத்தில் சுற்றி திரிந்தவர்களுக்கு ஒலிபெருக்கி மூலம் போலீசார் அறிவுரை வழங்கி அனுப்பி வைத்தனர். இரு சக்கர வாகனத்தில் சென்ற சிலர் முன் பகுதியில் வேப்பிலை வைத்து சென்றனர். கொரோனா 2வது அலையை கட்டுப்படுத்தும் வகையில் இன்று முதல் வரும் 24ந்தேதி வரை தமிழக அரசு முழு ஊரடங்கினை செயல்படுத்தியுள்ளது. காய்கறி, பலசரக்கு, இறைச்சி மற்றும் அத்தியாவசிய பொருள்கள் விற்பனைக்கு மட்டும் மதியம் 12மணி வரை அனுமதி கொடுத்துள்ளது. இன்று முதல் முழு ஊரடங்கு தொடங்குவதை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பகுதியில் காய்கறி,பலசரக்கு, இறைச்சி மற்றும் டீகடைகளை தவிர மற்ற கடைகள், நிறுவனங்கள் அடைக்கப்பட்டுள்ளன அரசுடன் பொது மக்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.