திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகரம் பேட்டை சுந்தர விநாயகர் கோவில் தெருவை சேர்ந்த செல்லத்துரை மகன் ரமேஷ் (41). என்பவர் நடத்தி வந்த கடைக்கு (11.01.2024) அன்று வந்த அதே பகுதியை சேர்ந்த பால விக்னேஷ் என்பவர் கடன் கேட்டு தான் கொடுக்கவில்லை என்பதால் தன்னை அருவாளால் வெட்டி காயப்படுத்தியதாக, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள் நோயாளியாக சிகிச்சை பெற்று வரும் ரமேஷ் கொடுத்த புகாரின் பேரில் பேட்டை காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
சண்முகநாதன்