திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரை அடுத்த கூவக்காபட்டி, வெள்ளையகவுண்டனுாரில் டீக்கடை நடத்தி வரும் பிரபு(40). இவரது மனைவி சந்திரா(35).இருவரும் பெருமாள்கோவில் பட்டியை சேர்ந்த மணிகண்டனிடம் ரூ.2 லட்சம் கடனாக வாங்கி உள்ளார் திரும்ப கொடுக்காத நிலையில் மணிகண்டன்(42). மற்றும் நண்பர்களான கருப்பண்ணநாயக்கனூரை சேர்ந்த தருமன்(27). வேலாம்பட்டியை சேர்ந்த சின்னமுத்து(29). ஆகியோர் பேரும் பிரபுவின் மனைவி சந்திராவிடம் அரிவாளை காட்டி கொலை மிரட்டல் விடுத்தனர் இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது. இதனைத் தொடர்ந்து கூம்பூர் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு மணிகண்டன் மற்றும் தருமன் ஆகியோரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா