தூத்துக்குடி : சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் புதுமண தம்பதியை கொலை செய்த வழக்கில் மேலும் ஒரு குற்றவாளி குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது – இந்த ஆண்டு இதுவரை 173 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையிலடைப்பு – மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் அவர்கள் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் திரு. கோ. லட்சுமிபதி இ.ஆ.ப அவர்கள் நடவடிக்கை. கடந்த (02.11.2023) அன்று தூத்துக்குடி சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட முருகேசன் நகர் பகுதியைச் சேர்ந்த வசந்தகுமார் மகன் மாரிசெல்வம் (23). மற்றும் அவரது மனைவி கார்த்திகா (21). ஆகிய இருவரையும் வீடுபுகுந்து அரிவாளால் தாக்கி கொலை செய்த வழக்கில் தூத்துக்குடி திரு.வி.க நகர் பகுதியைச் சேர்ந்தவர்களான வாசுதேவன் மகன் பரத் விக்னேஷ்குமார் (25). சண்முகம் மகன் முத்துராமலிங்கம் (47). தூத்துக்குடி கே.வி.கே நகர் பகுதியைச் சேர்ந்த இசக்கிமுத்து மகன் இசக்கிராஜா (23). ஏரல் சேதுக்குவாய்த்தான் பகுதியைச் சேர்ந்த அங்குதாஸ் மகன் கருப்பசாமி (24). தூத்துக்குடி சங்கர் காலனி பகுதியைச் சேர்ந்த மாரியப்பன் மகன் ராஜபாண்டி (27). மற்றும் தூத்துக்குடி டைமண்ட் காலனியைச் சேர்ந்த லெனின்முருகன் மகன் பாரத் சக்கரவர்த்தி (27). ஆகியோரை சிப்காட் காவல் நிலைய போலீசார் கைது செய்தனர்.
மேற்படி வழக்கின் குற்றவாளிகளான பரத் விக்னேஷ்குமார், முத்துராமலிங்கம், இசக்கிராஜா, கருப்பசாமி மற்றும் ராஜபாண்டி ஆகிய 5 குற்றவாளி கடந்த (03.12.2023) அன்று குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து சிறையிலடைக்கப்பட்ட நிலையில், மற்றொரு குற்றவாளியான பரத் சக்கரவர்த்தி மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க சிப்காட் காவல் நிலைய ஆய்வாளர் திரு. சண்முகம் அவர்கள் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களிடம் அறிக்கை தாக்கல் செய்தார்.மேற்படி காவல் ஆய்வாளரின் அறிக்கையின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் அவர்கள் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு பரிந்துரை செய்தார். அதன் பேரில் மாவட்ட ஆட்சியர் திரு. கோ. லட்சுமிபதி இ.ஆ.ப அவர்கள் தூத்துக்குடி டைமண்ட் காலனியைச் சேர்ந்த லெனின் முருகன் மகன் பரத் சக்கரவர்த்தி என்பவரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். அவரது உத்தரவின் பேரில் சிப்காட் காவல் நிலைய ஆய்வாளர் மேற்படி குற்றவாளியை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து பாளையங்கோட்டை மத்தியசிறையில் அடைத்தார். இந்த ஆண்டு இதுவரை போக்சோ வழக்குகளில் சம்மந்தப்பட்ட 14 குற்றவாளிகள் மற்றும் போதை பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்ட 30 குற்றவாளிகள் உட்பட 173 குற்றவாளிகள் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ளனர்.