அரியலூ: இந்திய சுதந்திர போராட்டத்தில் இன்னுயிர் நீத்த தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 30-ஆம் தேதி தியாகிகள் தினமாக கடைபிடிக்கப்பட்டும், அந்நாளில் தீண்டாமையை ஒழிக்க உறுதிமொழி மேற்கொள்ளப்பட்டும் வருகிறது. எனவே (30.01.2024)-ந் தேதி காலை 11.00 மணிக்கு அரியலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ச.செல்வராஜ் அவர்களின் தலைமையில் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது.உறுதிமொதி – இந்திய அரசியலமைப்பின்பால் இடைவிடாத, உளமார்ந்த பற்றுள்ள இந்தியக் குடிமகன்/குடிமகள் ஆகிய நான், நமது அரசியலமைப்பின்படி தீண்டாமை ஒழிக்கப்பட்டுவிட்டது. என்பதை அறிவேன்.
தீண்டாமையை அடிப்படையாகக் கொண்டு,எவர்மீதும் தெரிந்தோ, தெரியாமலோ சமூக வேற்றுமையை மனம், வாக்கு, செயல் என்ற எந்த வகையிலும் கடைப்பிடிக்கமாட்டேன் என்று இதனால் உளமார உறுதியளிக்கிறேன். அரசியலமைப்பின் அடிப்படைக் கருத்திற்கிணங்க, சமய வேறுபாடற்ற சுதந்திர சமுதாயத்தை உருவாக்குவதில் நேர்மையுடனும், உண்மையுடனும் பணியாற்றுவது எனது கடமையாகும் என்பதையும் உணர்வேன். இந்திய அரசியலமைப்பின்பால் முழுப்பற்றிற்கு இது என்றென்றும் எடுத்துக்காட்டாக விளங்குமென்றும் இதனால் உளமார உறுதியளிக்கிறேன் என உறுதிமொழி ஏற்கப்பட்டது.இந்நிகழ்ச்சியில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.R. விஜயராகவன் அவர்கள், காவல் அதிகாரிகள், காவல்துறையினர் மற்றும் மாவட்ட காவல் அமைச்சுப் பணியாளர்கள் கலந்துகொண்டு தீண்டாமையை ஒழிப்பு உறுதிமொழியினை ஏற்றுக்கொண்டனர்.