அரியலூர் : அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. விஷ்வேஷ் பா. சாஸ்திரி, இ.கா.ப., அவர்களின் உத்தரவின்படி, அரியலூர் மாவட்டம் முழுவதும் (30.12.2025) மற்றும் (31.12.2025) ஆகிய இரு தினங்களில் காவல்துறையினர் பல்வேறு சிறப்பு குற்றத் தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டனர். இந்த நடவடிக்கைகளின் போது, மாவட்டத்தின் முக்கிய பகுதிகளில் தீவிர வாகன சோதனைகள், ரோந்து பணிகள், சந்தேக நபர்களை கண்காணித்தல் மற்றும் சட்டம் ஒழுங்கு பராமரிப்பு தொடர்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
மேலும், குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்களை முன்கூட்டியே கண்டறிந்து நடவடிக்கை எடுக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் காவல்துறையினர் செயல்பட்டனர். இதன் மூலம், மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு நிலைமை சிறப்பாக பராமரிக்கப்பட்டதாகவும், பொதுமக்கள் அச்சமின்றி இயல்பு வாழ்க்கையை மேற்கொள்ளும் வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டதாகவும் காவல்துறை தெரிவித்தது.















