அரியலூர் : அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. விஷ்வேஷ் பா. சாஸ்திரி, இ.கா.ப., அவர்களின் உத்தரவின் படி, அரியலூர் நகர போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு. கார்த்திகேயன் அவர்கள் (02.01.2026) அன்று அரியலூர் நகரில் உள்ள சத்திரம் பகுதியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தினார். இந்த நிகழ்ச்சியின் போது நூற்றுக்கும் மேற்பட்ட இருசக்கர வாகன ஓட்டிகளிடம் நேரடியாக பேசிய அவர், வாகன விபத்துகள் ஏற்படுவதற்கான முக்கிய காரணங்கள், அதனால் உயிர் மற்றும் உடமைகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து விளக்கினார்.
குறிப்பாக, தலைக்கவசம் அணிவதின் அவசியம், வேகக்கட்டுப்பாடு, மதுபோதையில் வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் அபாயங்கள், போக்குவரத்து விதிகளை கடைப்பிடிப்பது போன்றவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும், சாலை பாதுகாப்பு விதிகளை முறையாக பின்பற்றினால் விபத்துகளை பெருமளவில் தவிர்க்க முடியும் எனவும், பொதுமக்கள் தங்களது பாதுகாப்பிற்காக போக்குவரத்து விதிகளை கடைபிடிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது. இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி பொதுமக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.















