அரியலூர்: அரியலூர் மாவட்ட ஆயுதப்படையில் (02.02.2026) அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. விஷ்வேஷ் பா. சாஸ்திரி, இ.கா.ப., அவர்களின் தலைமையில் 40 காவல்துறையினருக்கு புதுப்பித்தல் பயிற்சி (Refreshable Training) நடைபெற்றது. இந்த பயிற்சியில், மாவட்டத்தில் பணிபுரியும் காவலர்கள் முதல் சிறப்பு உதவி ஆய்வாளர்கள் வரை கலந்து கொண்டு, பொதுமக்களிடம் கனிவாகவும் மரியாதையுடனும் நடந்து கொள்ளும் முறைகள், சட்டம்–ஒழுங்கு பராமரிப்பு, மற்றும் பணித்திறனை மேம்படுத்தும் வழிமுறைகள் குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. மேலும், காவல்துறையினரின் தொழில்முறை திறனை உயர்த்தி, பொதுமக்கள்–காவல் துறை உறவை வலுப்படுத்தும் வகையில் இந்த பயிற்சி பயனுள்ளதாக அமைந்தது.
















