திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் (19.01.2026) அன்று திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர், முனைவர். நெ. மணிவண்ணன் இ.கா.ப., தலைமையில் காவல்துறைக்கும், குற்றவியல் வழக்கு தொடர்வு துறை வழக்கறிஞர்களுக்கும் இடையேயான மாதாந்திர ஒருங்கிணைப்புக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், மாநகரத்தில் உள்ள காவல்நிலையங்களில் பதிவு செய்யப்பட்டு நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்தும், வழக்குகளை விரைவாக முடித்து தக்க தண்டனை பெற்று தருவதற்க்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் ஒருங்கிணைப்பு கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சிறப்பாக பணிபுரிந்த அரசு உதவி வழக்கறிஞர்களுக்கு காவல் ஆணையர் பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.
நிகழ்வில் காவல் துணை ஆணையர்கள் மரு.சி.மதன் இ.கா.ப.,(மேற்கு), V.வினோத் சாந்தாராம் (கிழக்கு), S.விஜயகுமார் (தலைமையிடம்), குற்றவியல் வழக்குத் தொடர்வு துறையின் துணை இயக்குனர் சேவியர் பாண்டியன், திருநெல்வேலி மாவட்ட நீதிமன்ற உதவி அரசு வழக்கறிஞர்கள், காவல் உதவி ஆணையர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்















