கடலூர்: கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் இ.கா.ப. அவர்கள், சாமியார்பேட்டை அரசினர் மேல்நிலைப்பள்ளி ஆண்டு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் அவர் மாணவ, மாணவிகளுக்கு சிறப்புரையாற்றி, கல்வியின் முக்கியத்துவம், ஒழுக்கம், சட்ட விழிப்புணர்வு மற்றும் சமூக பொறுப்பு குறித்து அறிவுறுத்தினார். தொடர்ந்து திறமைமிக்க மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினார். பள்ளி நிர்வாகம் மற்றும் ஆசிரியர்கள் அவரது பங்கேற்புக்கு நன்றி தெரிவித்தனர்.
















