திருநெல்வேலி: திருநெல்வேலி மேலப்பாளையம் ஹாமீம்புரம் 7 ஆவது தெருவைச் சேர்ந்தவர் கவுது இப்ராஹீம் (59). இவர், கடந்த 2020 ஆம் ஆண்டு ஒரு சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்தது தொடர்பான வழக்கில் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு, பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில், உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட இவர், திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள் நோயாளியாக கடந்த மூன்று மாதங்களாக சிகிச்சை எடுத்து வந்த நிலையில் (17.03.2025) அன்று உயிரிழந்தார். இது தொடர்பாக சிறை அலுவலர் அளித்த புகாரின் பேரில் பெருமாள்புரம் காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்