திண்டுக்கல் : திண்டுக்கல் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் அவசர சிகிச்சை பிரிவில் உள்ள கழிவறையில் ஒரு ஆண் சிசு இறந்த நிலையில் கிடந்தது தொடர்பாக நடத்த விசாரணையில் அவசர சிகிச்சை பிரிவில் இருந்த சி.சி.டி.வி. கேமிரா காட்சிகள் ஆராயப்பட்டது. அதில் நைட்டி அணிந்த ஒரு பெண் துண்டில் குழந்தையை சுற்றி உட்கார்ந்து இருந்தார். இரவு 11 மணி அளவில் அவர் கழிவறைக்கு சென்று 20 நிமிடங்கள் கழித்து வெளியே வந்த காட்சி பதிவாகி இருந்தது. ஆனால் அவருக்கு திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் பிரசவம் நடக்கவில்லை, வெளியில் குழந்தை பெற்று அதனை அரசு ஆஸ்பத்திரியில் உள்ள கழிவறையில் வீசி சென்றது உறுதியானது. அந்த புகைப்படத்தின் அடிப்படையில் குழந்தையை வீசி சென்றது யார்? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா