திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம், தாண்டிக்குடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பெரும்பாறை பகுதியில் கடந்த 2014-ஆம் ஆண்டு மதுபான கடையில் பணியில் இருந்த ஊழியரை பாட்டிலை உடைத்து குத்திய வழக்கில் பெரும்பாறைச் சேர்ந்த செந்தில் 48. என்பவரை தாண்டிக்குடி காவல் நிலைய போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் இவ்வழக்கு கொடைக்கானல் குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.பாஸ்கரன் அவர்களின் அறிவுறுத்தலின்படி தாண்டிக்குடி காவல் நிலைய ஆய்வாளர் திரு.சுப்பிரமணியன் அவர்கள், நீதிமன்ற தலைமை காவலர் திரு.திருக்குமரன் அவர்கள் மற்றும் அரசு வழக்கறிஞர் அவர்களின் சீரிய முயற்சியால் 12.12.2022-ம் தேதி கொடைக்கானல் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி அவர்கள் குற்றவாளி செந்தில் என்பவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும் மற்றும் ரூ.10,000/- அபராதமும் அளித்து தீர்ப்பு வழங்கினார்கள்.