திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அரசு போக்குவரத்து பணிமனையில் இருந்து இன்று காலை தடம் எண் 62 சானாபுத்தூர் செல்லும் பேருந்து புறப்பட்டு சென்றது. பேருந்து கும்மிடிப்பூண்டி வழியே சானா புத்தூர் செல்வதற்காக பொன்னேரியில் இருந்து அரசூர் வழியாக பயணித்தது. நேற்று நேற்று காலை முதலே பொன்னேரி சுற்றுவட்டார இடங்களில் பரவலாக மழை பெய்து கொண்டிருக்கக்கூடிய சூழலில் இன்றும் கனமழை விட்டுவிட்டு பெய்து கொண்டிருக்கிறது. குறுகலான சாலையில் அரசு பேருந்து சென்றபோது எதிரே வாகனம் ஒன்று வந்ததால் ஓட்டுநர் அந்த வாகனத்திற்கு வழி விட முயன்ற போது எதிர்பாராத விதமாக கட்டுப்பாட்ட இழந்து சாலையோரம் இருந்த வயலில் அரசு பேருந்து கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.
காலை நேரத்தில் பேருந்து சென்று நேரத்தில் சொற்ப அளவிலான பயணிகள் மட்டுமே பேருந்தில் இருந்ததால் லேசான காயம் மட்டும் ஏற்பட்டது. தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்று காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மழையின் காரணமாக சாலையின் அருகே இருக்கும் மண் ஈரப்பதத்துடன் காணப்படுவதால் பேருந்தை சாலையின் ஓரத்திற்கு கொண்டு சென்ற போது மண் சரிந்து வயலில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காலை நேரத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்

திரு. பாபு