கன்னியாகுமரி : கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். R. ஸ்டாலின் IPS அவர்களின் உத்தரவின்படி, நாகர்கோவில் உட்கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளர் டாக்டர். லலித்குமார் IPS அவர்களின் மேற்பார்வையில், நாகர்கோவில் போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு பேச்சிமுத்து அவர்கள் தலைமையிலான போலீசார் பயிற்சியில் உள்ள அரசு பேருந்து ஓட்டுநர்களுக்கு போக்குவரத்து விதிகள் மற்றும் விபத்து கொடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். சாலை விபத்து ஏற்படாமல் இருக்க ஓட்டுநர்களின் பொறுப்புக்கள் குடிபோதையில் வாகன ஓட்டுவதால் ஏற்படும் விளைவுகள் அதிவேகமாக வாகனத்தை இயக்குதல்
விபத்து ஏற்பட்டால் செய்ய வேண்டியவை ஆகியவை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
















