திருநெல்வேலி : திருநெல்வேலி சந்திப்பு பேருந்து நிலையத்திலிருந்து காட்டாம்புளி கிராமத்துக்கு அரசுப் பேருந்து (05.10.2025) அன்று மாலை புறப்பட்டுச் சென்றது. அப்பேருந்தை வண்ணார்பேட்டை பணிமனையைச் சேர்ந்த ஓட்டுநர் வனராஜ்(49). இயக்கியுள்ளார். பேருந்து ராஜவல்லிபுரம் அருகே சென்ற போது எதிரே மது போதையுடன் இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் பேருந்து மீது மோதுவது போல் சென்றுள்ளனர். மேலும், பேருந்தை மறித்து ஓட்டுநரிடம் தகராறு செய்து கொலை மிரட்டல் விடுத்ததோடு, பேருந்தின் கண்ணாடியையும் உடைத்து சேதப்படுத்திவிட்டு தப்பி விட்டனர். இது குறித்து ஓட்டுநர் வனராஜ் அளித்த புகாரின் பேரில் தாழையூத்து காவல் ஆய்வாளர் சபாபதி வழக்குப்பதிந்து விசாரித்தார். அதில் தாழையூத்து, பூலித்தேவன் நகரைச் சேர்ந்த மணிகண்டராஜாவிற்க்கு (24). தொடர்பிருப்பது தெரிய வந்தது. அவரை கைது செய்த காவல்துறையினர் மற்றொருவரை தேடி வருகின்றனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்