திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டையை சேர்ந்தவர் பாண்டீஸ்வரி (37), இவர் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். இவருக்கும் இவரது கணவர் கணேசனுக்கும் கருத்து வேறுபாடு காரணமாக கணவன்-மனைவி இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் நிலக்கோட்டையில் பாண்டீஸ்வரி வீட்டுக்கு வந்த கணேசன் அவரை தரக்குறைவான வார்த்தைகளால் திட்டி ஆடைகளை பிடித்து இழுத்து கொலை மிரட்டல் விடுத்தார். இதுகுறித்து நிலக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா