விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், திருச்சுழி ஒன்றியம், உடையனாம் பட்டி அரசு தொடக்கப் பள்ளி சார்பில், 14-வது ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழா நடைபெற்றது. விழாவுக்கு, ஊராட்சி மன்றத்தலைவர் ஜெய முருகன் தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர் பழனி வேல் முன்னிலை வகித்து ஆண்டறிக்கை வாசித்தார். ஆசிரியர் சுதா வரவேற்றார். விழாவில், பள்ளியில் சிறந்த மாணவர்களுக்கும், விளையாட்டுப் போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு திருச்சுழி சப்.இன்ஸ் பெக்டர் வீரணன் பரிசுகள் வழங்கினார். விழாவில், ஊராட்சி மன்றத் தலைவர் சாமிக் கண்ணு, இன்பம் பவுண்டேசன் நிர்வாகிகள் விஜயகுமார், தமிழரசி, கிரீன் பவுண்டேசன் நிர்வாகி பொன்ராம், பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவர். சாந்தி பிரியா எம்.கே.ஆர் அன்பாலய நிறுவனர். ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி