கடலூர் : கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின்பேரில், பெண்ணாடம் காவல் ஆய்வாளர் திரு. எழில் வேந்தன் அவர்கள் பெண்ணாடம் சோழன் நகர் அரசு நடுநிலைப் பள்ளியில் ஆய்வு மேற்கொண்டு மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தினார். இந்த நிகழ்ச்சியில் சாலை பாதுகாப்பு விதிகள், போதைப்பொருள் பயன்பாட்டின் ஆபத்துகள், போக்சோ சட்டம் குறித்த முக்கிய விளக்கங்கள் மற்றும் சைபர் குற்றங்களைத் தவிர்ப்பது குறித்து மாணவர்களுக்கு விரிவாக எடுத்துரையப்பட்டது. மாணவர்களின் பாதுகாப்பும், சட்ட விழிப்புணர்வும் மேம்படுவது நோக்கமாக இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
















