திருநெல்வேலி : திருநெல்வேலி அருகேயுள்ள சுத்தமல்லி, பாரதியார் நகரைச் சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் (54). இவரிடம், திருநெல்வேலி நகரம் பகுதியைச் சேர்ந்த செய்யது அகமது கபீர் (41). என்பவர் இஎஸ்ஐ மருத்துவமனையில் அதிகாரியாக பணி செய்வதாகக் அறிமுகப்படுத்திக் கொண்டு கோபாலகிருஷ்ணனின் மகளுக்கு இஎஸ்ஐ மருத்துவமனையில் பணி வாங்கித் தருவதாகக் கூறி, அதற்காக ரூ. 26,25,600 பெற்றுள்ளார். அதன் பின்னர் வேலை வாங்கிக் கொடுக்காததோடு, பணத்தையும் திருப்பிக் கொடுக்காமல் மோசடி செய்து வந்ததால் இது குறித்து திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N. சிலம்பரசன், இ.கா.ப.விடம் புகார் அளிக்கப்பட்டது. அவரது உத்தரவின்பேரில், திருநெல்வேலி மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப் பதிந்து அகமது கபீரை தேடி வந்த நிலையில் அவரை (02.12.2025) அன்று கைது செய்தனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்
















