தென்காசி: தென்காசி மாவட்டம் கீழக்கடையம் பகுதியில் விருதுநகர் அருங்காட்சியம் பகுதியை சேர்ந்த நாக ராஜேந்திரன் (55). என்பவர் பத்திரிக்கையாளர் எனக் கூறிக்கொண்டு அலுவலகம் அமைத்து செயல்பட்டு வந்துள்ளார். இந்நிலையில், கீழக்கடையம், வடக்குப்பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்த சைலப்பன் மகன் ராஜா (30). நாகராஜேந்திரனுடன் நட்பாகியுள்ளார். இதையடுத்து, ஆட்சியர் அலுவலகத்தில் ஓட்டுநர் பணி வாங்கித் தருவதாகக் கூறி ராஜாவிடம் ரூ. 3 லட்சம் வாங்கிவிட்டு ஓட்டுநர் பணிக்கான நியமன ஆணையை வழங்கியுள்ளார்.
அந்த ஆணையை, ராஜா தென்காசி ஆட்சியர் அலுவலகத்தில் கொடுத்துப் பணியில் சேர சென்றபோது அந்த ஆணையும், ஆட்சியர் கையொப்பமும் போலி என தெரிய வந்தது. இது குறித்து ஆட்சியரின் நோ்முக உதவியாளர் செல்வகுமார், அளித்த புகாரின் பேரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் உத்தரவின் பேரில் கடையம் காவல் ஆய்வாளர் சுரேஷ்குமார் வழக்குப் பதிவு செய்து மோசடியில் ஈடுபட்ட நாகராஜேந்திரன், போலி ஆவணம் தயாரிக்க உதவிய விருதுநகரைச் சேர்ந்த ரமேஷ் ஆகிய இருவரையும் கைது செய்தார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்