திருநெல்வேலி: இளைஞர்கள் அரசுத் துறையில் வேலைவாய்ப்பு பெற்று சிறந்து விளங்க வேண்டுமென்று அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. இதன்படி இளைஞர்கள் தற்போது அதிகம் பேர் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் நடத்தப்படும் தேர்விற்கு பயிற்சி மையங்களுக்கு சென்று பயிற்சி பெற்று வருகின்றனர்.
இப்பயிற்சி வகுப்புகள் கிராமப்புற பகுதிகளில் கிடைக்கும் வகையில் இளைஞர்கள் TNPSC மூலம் வேலைவாய்ப்பு பெற அரசு இலவச பயிற்சி வகுப்புகளை பல கிராமங்களில் நடத்தி வருகிறது.
திருநெல்வேலி மாவட்டத்தில் பாலமடை பஞ்சாயத்திற்கு உட்பட்ட கிராமப்புற இளைஞர்களுக்கு இலவச பயிற்சி வகுப்பு திருநெல்வேலி மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஏற்பாட்டில் பாலமடை அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்று வருகிறது.
இப்பயிற்சி வகுப்பில் சிறப்பு விருந்தினராக திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ப.சரவணன், இ.கா.ப., அவர்கள் கலந்து கொண்டார்.
அப்போது இளைஞர்கள் உயர்ந்த லட்சியத்தை அடைய எவ்வாறு பயில வேண்டும் என்பது குறித்தும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பயின்ற அனுபவத்தை விளக்கிக் கூறியும், இதே போல் நீங்கள் அனைவரும் முன்னேற வேண்டும் என்று இளைஞர்களுக்கு உத்வேகம் அளித்தார்.
மேலும் தழிழ்நாடு அரசு மூலம் தங்களுக்கு அரிய வாய்ப்பு கிடைத்திருக்கிறது இந்த இலவச பயிற்சி மையத்தை சிறப்பாக பயன்படுத்திக் கொண்டு அனைவரும் வெற்றி பெற வேண்டும் என அனைவரையும் வாழ்த்தினார். இதே போல் இலவச பயிற்சி வகுப்புகள் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றும் அவர் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் திருநெல்வேலி வட்டாட்சியர் திரு.சண்முக சுப்பிரமணியன், திருநெல்வேலி ஊரக உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திரு.ஜெபராஜ், மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.