திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கடந்த ஜனவரி மாதம் முதல் ஜேசிபி உள்ளிட்ட கனரக வாகனங்கள் இயக்குவதற்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்த நிலையில் கொடைக்கானல் மேல்மலை கூக்கால் கிராமத்தில் அதே பகுதியைச் சேர்ந்த சுரேஷ் என்பவர் அரசு வருவாய் நிலத்தில் அனுமதி இல்லாமல் ஜேசிபி வாகனத்தை இயக்கி அதனை தடுக்க வந்த அரசு அதிகாரிகளை (கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர் மற்றும் வட்டாட்சியர்) ஜேசிபி வாகனத்தை வைத்து மிரட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதனையடுத்து இது தொடர்பாக வட்டாட்சியர் கொடுத்த புகாரின் அடிப்படையில் கொடைக்கானல் காவல் நிலைய போலீசார் கூக்கால் பகுதியைச் சேர்ந்த சுரேஷ் (39), என்பவரையும் இதற்கு உடந்தையாக இருந்த அன்பழகன்(38) மற்றும் கற்பகநாதன் (39) என்பவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் இவ்வழக்கு கொடைக்கானல் குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.பாஸ்கரன் அவர்களின் அறிவுறுத்தல் படி கொடைக்கானல் காவல் நிலைய ஆய்வாளர் திரு.பாஸ்டின் தினகரன் அவர்கள் மற்றும் நீதிமன்ற முதல் நிலை காவலர் திரு.ரமேஷ் மற்றும் அரசு வழக்கறிஞர் திரு.குமரேசன் அவர்களின் சீரிய முயற்சியால் (15.11.2022), ஆம் தேதி கொடைக்கானல் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி அவர்கள் அரசு அதிகாரிகளை பணியை செய்ய விடாமல் தடுத்து கொலை மிரட்டல் விடுத்த குற்றவாளி சுரேஷ் என்பவருக்கு 05 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.10,000/- அபராதமும், இதற்கு உடந்தையாக இருந்த அன்பழகன் மற்றும் கற்பகநாதனுக்கு தலா ரூ.10,000/- அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா