சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் தமிழ்நாடு அரசு நெடுஞ்சாலை துறை சார்பாக நடைபெற்ற சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியை மாண்புமிகு மேயர் சே. முத்துத்துரை அவர்களும் மரியாதைக்குரிய காவல் துணை கண்காணிப்பாளர் பார்த்திபன் அவர்களும் துவங்கி வைத்த பொழுது உடன் நெடுஞ்சாலைத்துறை செயற்பொறியாளர் அவர்கள் உதவி செயற்பொறியாளர் அவர்கள் மாநகராட்சி அலுவலர்கள் காவல்துறை அதிகாரிகள் ராமநாதன் செட்டியார் மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி பள்ளி மாணவச் செல்வங்கள் ஆசிரிய பெருமக்கள் கலந்து கொண்டனர் இந்த நிகழ்ச்சியின் பொழுது தலைக்கவசம் அணிந்து இரு சக்கர வாகனம் ஓட்டி வந்த நபர்களை ஊக்குவிக்கும் வகையில் பரிசுகளும் மேயர் அவர்கள் ரொக்க தொகையும் வழங்கி பாராட்டுகளை தெரிவித்தார்கள்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி